ராணி காலமானார்: அரசர் சாள்ஸ் III வழிநடத்துவார்
இங்கிலாந்தின் நீண்டகால மன்னரான இரண்டாம் எலிசபெத் மகாராணி, 70 ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர், 96 வயதில் பால்மோரலில் காலமானார்.
வியாழனன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து அவரது குடும்பத்தினர் அவரது ஸ்காட்டிஷ் தோட்டத்தில் கூடினர்
ராணி 1952 இல் அரியணைக்கு வந்தார். அவரது மரணத்துடன், அவரது மூத்த மகன் சார்லஸ், முன்னாள் வேல்ஸ் இளவரசர், புதிய அரசராகவும், 14 காமன்வெல்த் நாடுகளுக்குத் தலைவராகவும் நாட்டை துக்கத்தில் வழிநடத்துவார்.
இதுகுறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று பிற்பகல் பால்மோரலில் ராணி நிம்மதியாக இறந்தார் எனக் கூறியுள்ளது.