பிரித்தானியாவில் இடம்பெற்ற வல்வை நலன்புரிச் சங்கத்தின் 15 வது ஆண்டு கோடை விழா!!
பிரித்தானியா வல்வை நலன்புரிச் சங்கத்தின் 15வது கோடை விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை லண்டன் குறைடன் நகரில் இடம்பெற்றது.
உதைபந்தாட்டம், கைப்பந்தாட்டம், துடுப்பாட்டம், சிறுவர்களுக்கான தடைகளப்போட்டிகள், கபடி, பாடும் பந்து என பல விளையாட்டுகள் இடம்பெற்றன.
135 உதைபந்தாட்ட அணிகள் 17 உதைபந்தாட்டத் திடலில் விளையாடினர். உதைபந்தாட்டப் போட்டிகள் ஐரோப்பிய நாடுகள் தழுவிய ரீதியில் நடைபெற்றன. நோர்வே, டென்மார்க், பிரான்ஸ், சுவிற்சர்லாந்து நாடுகளிலிருந்து 12 அணிகள் பங்கெடுத்தனர். ஆயிரக்காணக்கான பார்வையாளர்கள் நிழக்வுகளைக் கண்டு களித்தனர்.
உதைந்தாட்டப்போட்டிகள் கீழ்வரும் பிரிவுகளில் இடம்பெற்றன.
7 வயதுக்குட்பட்ட பிரிவு (3 அணிகள்)
9 வயதுக்குட்பட்ட பிரிவு (8 அணிகள்)
11 வயதுக்குட்பட்ட பிரிவு (12 அணிகள்)
13 வயதுக்குட்பட்ட பிரிவு (16 அணிகள்)
15 வயதுக்குட்பட்ட பிரிவு (18 அணிகள்)
17 வயதுக்குட்பட்ட பிரிவு (16 அணிகள்)
19 வயதுக்குட்பட்ட பிரிவு (8 அணிகள்)
வயது வரையறுக்கப்படாத பிரிவு (32 அணிகள்)
30 வயதுக்கு மேற்பட்ட பிரிவு (8 அணிகள்)
40 வயதுக்கு மேற்பட்ட பிரிவு (16 அணிகள்)
50 வயதுக்கு மேற்பட்ட பிரிவு (8 அணிகள்)
16 அணிகளுக்கிடையில் துடுப்பெடுத்தாட்டப் போட்டிகள் நடந்தன.
வெற்றிபெற்ற அணிகளுக்கு மாவீரர்களின் பெயர்களில் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டன.