November 22, 2024

ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் உரிமைகாக எழுந்த தமிழர்கள்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலையடையும் வரை ‘‘உரிமைக்காக எழுதமிழா’’ என்ற முழக்கத்துடன் ,பெல்சியம் நாட்டில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால்   எழுச்சியுடன் தமிழர்கள் ஒன்று திரண்டு மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் , தமிழர்களின் சுயநிர்ணய  உரிமையுடன் கூடிய தீர்வு வழங்கப்பட்டால் இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் ஏற்படுத்தப்படும் என்ற கருத்து வலுத்துவரும் இச்சூழலில் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் வேளை தமிழர்கள்  தம் பலத்தை வெளிப்படுத்தி, தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு தமிழீழமே தமிழர்களின் தாகம் என முழக்கமிடும் களமாக ஐரோப்பிய முன்றல் அமைந்துள்ளது.இப் போராட்டம் முக்கியமான காலகட்டத்தில் முக்கியத்துவம்வாய்ந்த இடத்தில் நடைபெறுவதால் நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இப் போராட்டதினை அனைத்துலக மக்களவை மற்றும் இளையோர் அமைப்பினர் இணைந்து இப்போராட்டத்தை  ஏற்பாடு செய்துள்ளனர்.

இப்போராத்திற்கு பிரித்தானியா,பிரான்ஸ்,ஜேர்மன்,நோர்வே, டென்மார்க், நெதர்லாந்து, பெல்சியம்,இத்தாலி, சுவிஸ், பின்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து மக்கள் வருகைதந்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் பேருந்களிலும் சிற்றூர்திகளிலும், மகிழுந்துகளிலும் போராட்டம் நடைபெறும் பெல்ஜியத்தின் தலைநகர் புறூசெல்ஸ்சை சென்றடைந்தனர். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert