குவிந்தனர் சுற்றுலாப் பயணிகள்: வைர வடிவிலான 240 மீற்றர் கண்ணாடி தொங்கு பாலம் திறப்பு!
ஜோர்ஜியாவில் 240 மீற்றர் வைர வடிவத்திலா கண்ணாடித் தொங்கு பாலம் ஒன்று சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறந்து வைக்கப்பட்டது.
ஜோர்ஜியாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்பாசி கன்யொன் பகுதியில் மாலைகளுக்கிடையே அமைந்துள்ள பள்ளத்தாக்கில் இந்த தொங்கு பாலம் உருவாக்கப்பட்டது.
200 மீற்றர் உயிரத்தில் 240 மீற்றர் நீளம் கொண்ட வைர வடித்திலான கண்ணாடிப் பாலமாக வடிவமைக்கப்பட்டது. இதற்காக 40.8 மில்லியன் டொலர்கள் செலவாகியுள்ளது. இப்பாலத்தை இஸ்ரேல் நிறுவனமாக காஸ் லேண்டின் நிர்மாணித்துள்ளது. பாலத்தின் நிர்மாண வேலைகள் 2019 ஆண்டு தொடங்கப்பட்டது.
தொங்கு பாலத்தின் நடுவில் வைரத்தின் வடிவில் தங்குமிட உல்லாச விடுதி, உணவகங்கள், கோப்பி அருந்தகங்கள் உள்ளன. சுற்றுலாப் பயணிகள் பாலத்தின் நடுவில் அமைந்துள்ள வைர வடிவடிப் பகுதியில் நின்று 360 பகையில் பரந்த இயற்கைக் காட்சிகளை இரசிக்கலாம். இப்பாலம் கின்னஸ் உலக சாதனைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
தொங்குபாலம் அமைந்துள்ள பகுதியில் செல்வதற்கான பதைகள், வாகனத் தரிப்பிடங்கள், ஊஞ்சல், பைக் லைன், குடிசைகள் மற்றும் விடுதி வளாகம் என்பன அமைக்கப்பட்டுள்ளன. இங்கு நூற்றுக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளது.