யேர்மனி டோட்முண்ட் சிவன் ஆலய பன்னிரண்டாவது வருடாந்த திருவிழா வித்வானா – 202002.07.2022 தொடக்கம் 13.07.2022 வரை
அருள்மிகு சாந்தநாயகி அம்பாள் சமேத சந்திரமௌலீஸ்வரர் ஆலயம் பன்னிரண்டாவது வருடாந்த திருவிழா வித்வானா – 2020
02.07.2022 தொடக்கம் 13.07.2022 வரை சிவனேயச் செல்வர்களே நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் ஆனி மாதம் பதினெட்டாம் நாள் 02.07.2022 சனிக்கிழமை ஆயிலிய நட்சத்திரமும் திருதியை திதியும் கூடிய நன்னாளில் பகல் பதினொரு மணியளவில் கொடியேற்றத்துடன் வருடாந்த திருவிழாவானது ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்களிற்கு காலை மாலை இரு வேளைகளிலும் விசேட அபிசேக ஆராதனைகள் அர்ச்சனைகள் இடம்பெற்று எம்பெருமான் எழுந்தருளி திருவீதியுலா வந்து அடியார்களுக்கு அருள்பாலிப்பார். – திருவிழாக்கால நிகழ்வுகள் – 01.07.2022 வெள்ளிக்கிழமை – பூர்வாங்க கிரியாரம்பம். விநாயகர் வழிபாடு, கிராமசாந்தி, ஆலய சாந்தி, பிரவேச பலி 02.07.2022 சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு அபிசேகமும் மதியம் 12:00 மணிக்கு கொடியேற்றமும் தொடர்ந்து சுவாமி உள்வீதி
உலாவருதல் இடம்பெறும். மாலை 16:00 மணிக்கு யாக பூஜையைத் தொடர்ந்து வசந்தமண்டப பூசை சுவாமி உள்வீதி வலம்வருதல்.
விபூதிப்பிரசாதம் வழங்குதலுடன் 20:00 மணிக்கு திருவிழா நிறைவுபெறும். 03.07.2022 ஞாயிற்றுக்கிழமை குதிரைவாகனத்திருவிழா | 04.07.2022 திங்கட்கிழமை சிவஞானபோதஉற்சவம், இடபவாகனம் 05.07.2022 செவ்வாயக்கிழமை நாயன்மார்கள் திருவிழா, மயில்வாகனம் 06.07.2022 புதன்கிழமை – திருநடனத்திருவிழா, நாக வாகனம். 07.07.2022 வியாழக்கிழமை மாம்பழத்திருவிழா. சுவாமி கைலாசவாகனத்தில் எழுந்தருளல் 08.07.2022 வெள்ளிக்கிழமை வேட்டைத்திருவிழா, குதிரை வாகனம் 09.07.2022 சனிக்கிழமை சப்பறத்திருவிழா 10.07.2022 ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழா (12:00 – இரதபவனி ஆரம்பம், 16:00 – பச்சை சாற்றல் இடம்பெறும்) 11.07.2022 திங்கட்கிழமை காலை – தீர்த்த உற்சவம்
மாலை – கொடியிறக்கம். தொடர்ந்து சண்டேஸ்வரர் உற்சவம், ஆச்சார்யார் திருவிழா. 12.07.2022 செவ்வாய்க்கிழமை காலை 08:00 மணிக்கு பிராயச்சித்த அபிசேகத்துடன் கூடிய விசேடபூசை.
மாலை 16:00 மணிக்கு பூங்காவனம், திருக்கல்யாணம், திருவூஞ்சல், சுவாமி உள்வீதி வலம்வருதல். 13.07.2022 புதன்கிழமை மாலை 16:00 மணிக்கு விசேட அபிசேகத்துடன் ஆரம்பமாகி வைரவர்மடை நடைபெறும். குறிப்பு – பாற்செம்பு கற்பூரச்சட்டி காவடி அங்கப்பிரதட்ணம் போன்ற நேர்த்திக்டன் செய்பவர்கள் முற்கூட்டியே
ஆலய நிர்வாகத்தினருடன் தொடர்புகொள்ளவும். பகல் அன்னதானம் நடைபெறும். அடியார்கள் கொரோனாக் கிருமித் தொற்று தொடர்பான சட்டங்களுக்கு அமைவாகவும், ஆலய பரிபாலன சபையினரின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவும் நடந்துகொள்ளவும்.
திருவிழாக்கால சிவாச்சாரியர்கள் உற்சவகுருவும் ஆலயாகுருவும்
சிவாகமகிரியாதத்வநிதி
சிவஸ்ரீ. சாமி. தெய்வேந்திரக்குருக்கள் . சாதகாச்சார்யார்
உதவிக்குருமார்கள் சிவஸ்ரீ நடராஜபிரசாந்தக்குருக்கள்
பிரம்மஸ்ரீ வசந்த கம்சபிரசாந்தசர்மா (உடுக்கியவளை பிள்ளையார் தேவஸ்தானம், வட்டுக்கோட்டை)
கிரிஜாமாமணி சிவஸ்ரீ பாலஸ்ரீ ராமச்சந்திரக்குருக்கள்
– (London)|
மங்கள வாத்தியம் தவில் ஞானச்சுடரொளி பரமு செல்வநாயகம்
நாதஸ்வரமதுரகானமணி குமரகுரு பாலமுரளி (வுப்பெற்றால்
(முல்கைம்) மற்றும் ஏனைய மங்கள வாத்திய கலைஞர்களும். Hindu Tamil Kultural Center inartmund e.V மேலதிக தொடர்புகளுக்கு : 0231-162377, 0231 -4270431. 0231 -79916307
ஆலய குரு – 01728045421
இவ்வண்ணம் ஆலய பரிபாலன சபை
Aaruth Cres
Bank: Commerzbank Konto: 011 915 1200, BLZA 440 800 50 IBAN: DE11 4408 00510 0119 1512 00, BIC: DRESDEFF 440