இலங்கை:மின்சார பிரச்சினைக்கு தீர்வு!
இலங்கையில் மின்துண்டிப்பு நேரம் குறைவடையலாமென நம்பப்படுகின்றது
நீர் மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
அதற்கமைய, நீர் மின் உற்பத்தியிலிருந்து 48 வீதமான மின்சாரம் தேசிய கட்டமைப்பில் தற்போது இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர், பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அனல் மின் உற்பத்தியினூடாக 44 வீதமான மின்சாரம் மற்றும் காற்றாலை மின் உற்பத்தியினூடாக 10 வீத மின்சாரமும் தேசிய கட்டமைப்பில் இணைக்கப்படுவதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், நீர் மின் உற்பத்தியினூடாக போதுமானளவு மின்சாரத்தை தேசிய கட்டமைப்பில் இணைப்பதற்கு இயலுமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சப்புகஸ்கந்த A மற்றும் B அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கான மசகு எண்ணெய் கிடைத்துள்ளது.
எரிபொருள் இன்மையால், பத்தல மற்றும் வடக்கு ஜனனி மின் உற்பத்தி நிலையங்களில் மின்சார உற்பத்தியை மேற்கொள்ள முடியாதுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர், பிரதி பொது முகாமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.