März 28, 2025

கதிரையை விடமாட்டேன்:கோத்தா!

தான் உடனடியாக ஜனாதிபதி கதிரையிலிருந்து விலகப்போவதில்லையென கோத்தபாய தெரிவித்துள்ளார்.

தோல்வியடைந்த ஜனாதிபதியாக பதவியிலிருந்து விலக முடியாது என்றும் தனக்கு 5 வருடங்களுக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அந்த பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாக தாம் பதவி விலகப்போவதில்லை எனவும் மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert