இலங்கை உர இறக்குமதி தனியாரிடம்!
இலங்கையில் எதிர்வரும் மகா பருவம் தொடக்கம் உர இறக்குமதியில் இருந்து அரசாங்கம் விலகும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி நாட்டுக்குத் தேவையான அனைத்து உரங்களையும் தனியார் வர்த்தகர்கள் ஊடாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் அனைத்து விவசாயிகளுக்கும் உரம் கொள்வனவு செய்ய அரசு நிதியுதவி அளிக்கும் என்றார்.
அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உரம் இறக்குமதி செய்வதில் அரசாங்கத்தின் பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.