யாழில் சிறுபகுதிக்கே அரிசி பொதி!
தமிழக அரசினால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட உதவித் திட்டத்தில் முதற்கட்டமாக யாழ்ப்பாணத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஒரு சிறுபகுதி குடும்பங்களிற்கே பலன் கிட்டவுள்ளது.
தமிழக அரசின் உதவிகள் இலங்கை முழுவதும் பகிரப்பட்டுள்ள நிலையில்20 ஆயிரம் அரிசி பொதிகளும் 7500 கிலோ பால் மாவும் கிடைக்கவிருக்கின்றது. இதனை முன்னுரிமை அடிப்படையில் வறிய மக்களுக்கு பகிர்ந்தளிக்கவிருக்கின்றோம் என யாழ் மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
பால்மாவை வறிய குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கும் சிறு குழந்தைகளை வைத்திருக்கும் குடும்பங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
இதனிடையே யாழ்.குடாநாட்டில் மட்டும் 106ஆயிரத்து420 குடும்பங்கள் நிவாரணத்தை எதிர்பார்த்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.