வடகிழக்கில் புலம்பெயர் தமிழ் மக்கள் முதலீடு தேவை!
புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் முதலீடு செய்தால் வடகிழக்கின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப முடியும் .புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் மிகவும் பலமானவர்கள் தற்பொழுது அவர்களுடைய சக்தியினை நாங்கள் பயன்படுத்துகின்ற போது உண்மையில் நாட்டினுடைய பிரச்சனைக்கு தோள் கொடுக்க கூடியதாக இருக்கும்.
உண்மையில் பொருளாதார பிரச்சனையில் ஏனைய மாகாணங்கள் மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது நாங்கள் வெற்றி கொள்ள முடியும் உண்மையில் யுத்த காலத்தில் எமது புலம்பெயர் மக்களின் உதவிகள்மூலம் தான் எம்மை தற்பொழுது நிமிர்த்தியுள்ளது,
எனவே வெளிநாட்டில் உள்ள புலம்பெயர் மக்களின் முதலீடுகள் தேவையானது தற்போதைய காலம் அதற்கு ஏற்றதாக இல்லாது போனாலும் நிச்சயமாக இந்த பிரச்சனையின் பின்னால் ஒரு சிறந்த ஒரு எதிர்காலம் இலங்கைக்கு இருக்கின்றது என்று என்னால் கூற முடியும்.
கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும் எனவே இலங்கைக்கு ஞாயம் கிடைக்கப் போகின்றது எனவே எதிர்வரும் காலத்தில் எனவே இலங்கைக்கு கிடைக்கும் எனவே வெளிநாட்டில் உள்ள புலம்பெயர்ந்துள்ள மக்கள் தமது வடபகுதியில் முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் வடபகுதியின் பொருளாதாரத்தை மென்மேலும் மேம்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.