ஆர்ப்பாட்டங்கள் அதிகரிக்குமென்கிறார் ரணில்!
வீதிகளில் ஆர்ப்பாட்டங்கள் அதிகரிக்கலாம் ,எனினும் அமைதியின்மை கட்டுக்கடங்காததாக மாறாது என எதிர்பார்ப்பதாக ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆறுவாரங்களில் இடைக்கால வரவுசெலவுதிட்டத்தினை சமர்ப்பிப்பேன் என தெரிவித்துள்ள பிரதமர் ரணில்விக்கிரமசிங்க பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இரண்டுவருட நிவாரண திட்டத்திற்கு நிதியை வழங்குவதற்காக உட்கட்டமைப்பு திட்டங்களை குறைக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நெருக்கடிக்கு தீர்வை காணமுயலும் தருணத்தில் பணவீக்கம் அதிகரிக்கலாம் என எச்சரித்துள்ளார்.
22 மில்லியன் மக்களை கொண்ட நாட்டில் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளவர்களிற்கு நிதிஉதவியை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் கடினமான நாட்களை பார்க்கும்போது ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்புகள் இருக்கும்,மக்கள் கஷ்டப்படும்போது அவர்கள் போராட்டங்களில் ஈடுபடுவது இயற்கையான விடயம் என தெரிவித்துள்ளார்.
ஆனால் அது அரசியல் அமைப்பினை பலவீனப்படுத்துவதை நாங்கள் விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்
இடைக்கால வரவுசெலவுதிட்டத்தில் செலவுகளை குறைப்பது முடிந்தவரை செலவுகளை குறைத்து நலன்புரித்திட்டங்களிற்கு மாற்றுவது ஆகியவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
எங்களிற்கு ரூபாய் வருமானமில்லை,தற்போது மேலும் ஒரு டிரில்லியன் ரூபாய்களை அச்சிடவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
வருடாந்த பணவீக்கம் எதிர்வரும் மாதங்களில் 40 வீதமாக அதிகரிக்கும் என எச்சரித்துள்ள பிரதமர் ஏற்கனவே கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள இலங்கையின் குடும்பங்களின் மீது அழுத்தங்கள் அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நிவாரண நடவடிக்கைகளிற்கான பணத்திற்காக தனது அமைச்சு நாட்டின் ஊதிப்பெருத்துள்ள அரசாங்க துறையில் சாத்தியமான செலவீனங்களை குறைப்பது குறித்து ஆராய்ந்து வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.