பெற்றோல் இல்லை:குழந்தை மரணம்!
இலங்கையில் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி காரணமாக பிறந்தே இரண்டே நாளான பச்சிளம் குழந்தை உயிரிழந்துள்ளது.
தாய்ப்பால் சரிவர கிடைக்காத காரணத்தினால் குறித்த குழந்தையின் குருதியில் சீனி அளவு குறைந்து உடல் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கியுள்ளது.உடனடியாக வைத்தியசாலை கொண்டு செல்ல முயன்ற பெற்றோருக்கு, சரியான நேரத்தில் போக்குவரத்து வசதி கிடைக்காவில்லை.
குழந்தையை வைத்தியசாலை எடுத்துச் செல்ல ஆட்டோ ஒன்றைத் தேட ஒரு மணிநேரத்துக்கும் அதிகமான நேரம் கழிந்துவிட்டது. அவர்களின் வீட்டிலிருந்து வைத்தியசாலைக்கு செல்ல அரைமணிநேரம் தான் பயணிக்க வேண்டும். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
எனினும் இரத்தத்தில் சீனியின் அளவு கடுமையாக குறைவடைந்த காரணத்தினால் குழந்தை இறந்துவிட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஆட்டோ ஒன்றைத் தேடிக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அந்த ஒருமணிநேரம் தாமதம் ஏற்படாது போயிருந்தால் குழந்தையை காப்பாற்றிக் கொள்ள முடிந்திருக்கும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.இதனிடையே கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.பெற்றோல் மற்றும் மருந்து பற்றாக்குறையினால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பாக வைத்தியர் ஒருவரின் பதிவிற்கு மஹேல கருத்துத் தெரிவித்துள்ளார்.குறித்த பதிவில், “இதை படித்துவிட்டு கோட்டாபய ராஜபக்ஷ குற்ற உணர்வுடன் இருந்தால் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த நிலைக்கு அவரே நேரடிப் பொறுப்பு. அத்தோடு, இந்த நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருமே இதற்கு பொறுப்பு கூற வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.