November 24, 2024

சீனா மீண்டும் கை கொடுக்க தொடங்கியுள்ளது!

இலங்கை நாடு நாடாக கடன் பெற்றுவருகின்ற நிலையில் சீனா மீண்டும் கை கொடுக்க தொடங்கியுள்ளது.

இலங்கையின் கடன்நெருக்கடியை தீர்ப்பதற்கான முழுமையான உதவியையும் ஆதரவையும் வழங்க தயார் என சீனா தெரிவித்துள்ளது.

சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் வாங் வென்பின் இதனை தெரிவித்துள்ளார்.

முறையான தீர்வுகளை பெறுவதற்கு இலங்கையுடன் ஆலோசனைகளை மேற்கொள்வதற்கு உரிய நிதிநிறுவனங்களிற்கு சீனா ஆதரவளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

உரிய நாடுகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராகவுள்ளது என தெரிவித்துள்ள அவர் இலங்கையின் கடன் சுமையை குறைப்பதற்கும் இலங்கை பேண்தகு அபிவிருத்தியை அடைவதற்கும் சாதகமான பங்களிப்பை வழங்க தயாராகவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பங்களிப்பு மற்றும்  நிதிவழங்கும்  சகாக்களின் நியாயாபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களையும் முதலீடு மற்றும் நிதியின் ஸ்திரதன்மை மற்றும் நம்பகதன்மையையும் உறுதிசெய்வதற்கான சுயாதீன முயற்சிகளை இலங்கை மேற்கொள்ளும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert