கோத்தா விவகாரம்,இன்று நிலையியற்கட்டளை!
ஜனாதிபதிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்தக்கொள்வதற்காக நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி வைப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்துவதற்கு ஆதரவாக வாக்கெடுப்பு அமையும் பட்சத்தில் மாத்திரமே நிலையியற் கட்டளைகள் இடைநிறுத்தப்பட்டு ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் பெரும் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பாராளுமன்றம் இன்று (17) சபாநாயகர் தலைமையில் கூடுகிறது.
புதிய பிரதமராக எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்த ரணில் விக்கிரமசிங்க பிரதமராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அமைச்சரவை அமைச்சர்கள் சிலரும் நியமிக்கப்பட்டுள்ளதால் ஆளுங்கட்சியின் பாராளுமன்ற ஆசனங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.