November 23, 2024

பேரணி யாழ்.பல்கலைக்கழகத்திற்கும் பயணிக்கிறது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறை வீட்டின் முன் விழுந்து வணங்கி முள்ளிவாய்க்கால் பேரணி ஆரம்பிக்கப்பட்டது.

மே 18 இல் முள்ளிவாய்க்காலில் அப்பாவி தமிழ் மக்களை கொத்துக் கொத்தாக கொன்றொழித்த சிங்கள பேரினவாதத்தின் கறைபடிந்த நாளான முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் கடந்த 12 ஆம் திகதி உணர்வுபூர்வமாக தமிழர் தாயகப் பகுதிகளில் ஆரம்பமானது. வைக்கப்பட்டது.

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணியானது நடைபவனியாக பருத்தித்துறை நெல்லியடி, அச்சுவேலி ,நல்லூர் கந்தசாமி ஆலயம் யாழ் பல்கலைக்கழகம் ஊடாக யாழ் நகரத்தை வந்தடையவுள்ளது.

பின்னர் யார் நகரத்திலிருந்து நாவற்குழி கைதடி சாவகச்சேரி கொடிகாமம் ஊடாக கிளிநொச்சியை சென்றடைந்து அங்கிருந்து மே 18 திகதி புதன்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை சென்றடைய உள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert