பிச்சையெடுக்க வைத்துள்ளனர்:ஓய்வு இராணுவ அதிகாரி!
அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் எனில் பணத்தை அச்சடிக்க வேண்டும் என்று கூறுமளவுக்கு நாடு மிகவும் நாடு மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாக தாய் நாட்டுக்கான இராணுவ வீரர்களின் அமைப்பின் ஒருங்கமைப்பாளர்
சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (15) ஊடகங்களுக்குக் கருத்துரைக்கம்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பணத்தை அச்சடிக்காமல் சம்பளம் வழங்க முடியாது என்று கூறுமளவுக்கு நாடு இன்று தள்ளப்பட்டுள்ளது. இதனை மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநரே கூறியுள்ளார்.
அதேபோன்று இரண்டு தினங்களுக்கு முன்னர் பிரதமராக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கவும் இவ்விடயத்தை கூறியுள்ளார்.
எனவே நாட்டின் பொருளாதாரம் மிகவும் நெருக்கடியான நிலைமையை எதிர்கொண்டுள்ளது.
எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எரிவாயுவை வைத்துக்கொண்டு விநியோகிக்காமல் இருப்பதாகவே மக்கள் நினைக்கின்றனர்
அவ்வாறு இல்லாவிட்டால் எரிபொருளை கொண்டுவராமல் இருப்பதாக மக்கள் நினைக்கக்கூடும்.
உண்மையை கூறினால் நாட்டில் எரிவாயு இல்லை. அதுமட்டுமல்லாது எரிவாயுவுடன் வந்த கப்பல் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
3 பில்லியன் டொலரை செலுத்திக்கொள்ள முடியாது அந்தக் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளமைக்காக நாளொன்றுக்கு இலட்சம் ரூபாய் வழங்கும் நிலைமையே ஏற்பட்டுள்ளது.
ஏன் இது? உண்மையில் நாட்டில் டொலர் இல்லை.
திறைச்சேரியில் பணம் இல்லாத நிலைமையே ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.