வீட்டை கொழுத்தாதீர்கள்:நிமல்!
சொத்துக்கள் அழிக்கப்படுவதையும், கொள்ளையடிப்பதை சமூகமயமாக்குவதையும் ஒரு சிறந்த நாடு மற்றும் சிறந்த எதிர்காலத்தை எதிர்பார்க்கும் எவராலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
முகநூலில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், நாட்டின் எதிர்காலத்தை கையில் எடுக்கவிருக்கும் இளைஞர்கள் வன்முறையைத் தூண்டுவதுதான் இங்கு தீவிரமான நிலை. இவ்வாறான வன்முறைகளில் இருந்து இளைஞர் குழுக்களை விடுவித்து அவர்களை சரியான பாதையில் வழிநடத்த நீங்கள் அனைவரும் முன்வருவீர்கள் என நம்புகிறேன்.
எக்காரணம் கொண்டும் எதிரியின் வீட்டிற்கு தீ வைக்காதீர்கள். இந்த மாதிரியான அழிவை வேறு யாருக்கும் செய்யாதீர்கள்.. ஏனென்றால் ஒருவருடைய கனவு, எதிர்காலம், பெருமை மற்றும் மகிழ்ச்சி இருக்கிறது.உங்கள் மத போதனைகளின்படி செற்படுங்கள்- என்று பதிவிட்டுள்ளார்.
சமீபத்த்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களினால் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிமல் லன்சா உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பல அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது