காலிமுகத்திடலிற்கு சென்ற கைதிகள் திரும்புகின்றனராம்!
காலிமுகத்திடல் தாக்குதலிற்கு அழைத்து செல்லப்பட்ட ஒரு தொகுதி சிறைக்கைதிகள் சிறைச்சாலைக்கு திரும்பியுள்ளனர்.
கொழும்பு வன்முறையின்போது தப்பிய 58 சிறைக் கைதிகளில் 32 பேர் மீண்டும் சிறை திரும்பியதாக சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு காலிமுகத்திடலில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற அமைதிப் போராட்டத்திறகுள் மகிந்த ஆதரவு அணி புகுந்து தாக்கியதனால் ஏற்பட்ட வன்முறையின்போது சிறைக் கைதிகளும் பயனபடுத்தப்பட்டதாக செய்திகள் வெளிவந்தாலும் கைதிகளை ஏற்றிச் சென்ற பேருந்துகள் வன்முறை இடம்பெற்ற இடத்தில் அகப்பட்டதனால் அதில் இருந்த கைதிகள தப்பி விட்டதாக சிறைச்சாலை ஆணையார் நாயகம. தெரிவித்திருந்தார்.
இதற்கமைய சிறைக் கைதிகள் 58 பேர் இதன்போது தப்பியமை உறுதியாகியது. இவ்வாறு தப்பிய கைதிகள் படகுகள் மூலம் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவக கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தமிழ நாட்டின் இராமேஸ்வரம், கோடியாக்கரை, தொண்டி மற்றும் நாகை மாவட்டக் கரையோரங்கள் உசாராக்கப்பட்டது.
தற்போது வரையில் 32 கைதிகள் சிறைக்கு திரும்பி விட்டதாகவும் 26 பேர் தொடர்ந்தும் தேடப்படுகின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.