புதிய அரசாங்கம் வந்ததும் பேச்சுக்கள் தொடரும் – சர்வதேச நாணய நிதியம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து புதிய அரசாங்கம் அமைந்த பின்னரே பேச்சுவார்த்தை தொடரும் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான குழுவின் பிரதானி மசாஹிரோ நொசாகி இதனைத் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப மட்டத்திலான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் சமூக பதற்றநிலை குறித்தும் சர்வதேச நாணயம் நிதியம் அவதானம் செலுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், சர்வதேச நாணய நிதியத்தின் கொள்ளைகளுக்கமைய இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.