ரணிலுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து மக்கள் போராட்டம்
முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவும் ஆதரவாகவும் போராட்டங்கள் இன்று நடைபெற்றிருந்தன.
இன்று சனிக்கிழமை கொழும்பில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு முன்னால் ஒரு பகுதியினர் அவருக்கு எதிராக மக்கள் போராட்டத்தை நடத்தியிருந்தனர்.
ஆர்ப்பாடத்தில் கலந்துகொண்டவர்கள்
‚உங்கள் மகிழ்ச்சியான நாட்கள் முடிந்துவிட்டன‘
‚ரணில் வீட்டுக்குப் போ‘
‚ரணில் வீட்டில் இரு‘
‚ஓய்வு பெறும் நீங்கள் மேலும் இருப்பது அவமானம்‘
‚ரணில் துரோகி‘
‚ரணில் எனது கடின உழைப்பின் வரியை ஏன் மோசடி நண்பர்களிடம் கொடுத்தாய்‘
‚எனது வரிப்பணத்தில் விளையாடி கடன்பத்திரத்தை வழங்கிய ரணில் ஒரு குற்றவாளி‘
போன்ற வாசங்கள் அமைந்த பதாதைகளை வைத்து கொட்டொலி எழுப்பி ரணிலுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேநேரம் அதே பகுதியில் அவருக்கு ஆதரவாகவும் மக்கள் போராட்டத்தை நடத்தியிருந்தனர்.
இருதரப்பு போராட்டத்தை அடுத்து அங்கு பதற்ற நிலை காணப்பட்டதால் காவல்துறையினர் அதிகளவு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
ரணிலுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம் நடத்துவது இதுவே முதல் முறை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.