அவசர காலம் தேவையில்லை:வலுக்கிறது கண்டனம்!
இலங்கையில் அவசரகால சட்டத்தினை பிரகடனப்படுத்தியமை தொடர்பில் அரசாங்கம் பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் டுவிட்டர் பதிவொன்றினூடாக இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அச்சம் மற்றும் வன்முறையின்றி இந்த சூழ்நிலையை கையாள முன்வர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே அண்மைக் காலங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் அமைதியான முறையில் மக்களின் கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையிலேயே அமைந்திருந்தாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் தெரிவித்துள்ளார்.
இவை நாட்டின் ஜனநாயகத்துக்கு பெருமையை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தாகவும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் அவசர நிலைமையை அமுல்ப்படுத்த வேண்டிய தேவை குறித்து புரிந்து கொள்வது கடினமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்