November 24, 2024

உண்மையாக மகிந்த திங்கள் ராஜினாமா?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைச்சரவை அமைச்சர்கள் குழுவும் ஆதரவளித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக பிரதமர் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோரினால் பதவி விலக தயார் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஒட்டுமொத்த அமைச்சரவையும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (06) பிற்பகல் கூட்டப்பட்ட அவசர விசேட அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை காலை அமைச்சரவை ராஜினாமா செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே நேற்றைய தினம் பாராளுமன்ற பிரதி சபாநாயகராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பதவி விலக தீர்மானித்துள்ளார்.அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கையளிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருந்திருந்தார்.பின்னர, நேற்றைய தினம் பாராளுமன்றில் புதிய பிரதி சபாநாயகருக்கான வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்த நிலையில் அதில் 148 வாக்குகளை பெற்று மீண்டும் பிரதி சபாநாயகராக அவர் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert