November 24, 2024

காலிமுகத்திடலிற்கு வந்தார் இசைப்பிரியா!

இறுதிக்கட்ட யுத்தத்தில்  படுகொலை செய்யப்பட்ட  தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் புகைப்படத்தை தாங்கிய பதாகை காலி முகத்திடலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.   

இந்த நிலையில் போராட்டக் களத்தில் இசைப்பிரியாவின் புகைப்படத்தைத் தாங்கி இருந்தவர் கருத்து  வெளியிடுகையில், விடுதலைப் புலிகளின் ஊடகங்களான நிதர்சனம் உட்பட அவர்களின் ஊடகங்களில் பணியாற்றிய ஊடகவியலாளர் என்ற வகையில் நாங்கள் இசைப்பிரியாவை அறிவோம். இசைப்பிரியா ஒரு ஊடகவியலாளராகவே பணியாற்றினார்.

அவர் துப்பாக்கியை ஏந்தி போரில் ஈடுபட்டவர் அல்ல. எனது சிறந்த நண்பரான இருந்த திரைப்பட இயக்குனர் கேசவராஜன் நவரட்ணமும் விடுதலைப் புலிகள் மற்றும் ஈழம் சம்பந்தப்பட்டு ஊடகவியலாளராக பணியாற்றியவர்.

அவர் திரைப்பட படைப்பாளி, அண்மையில் உயிரிழந்தார். இசைப்பிரியா, கேசவராஜன் நவரட்ணத்தின் மாணவி என்று கூறுகின்றனர்.

இசைப்பிரியா போரில் துப்பாக்கி ஏந்தியவர் இல்லை. அவரும் இறுதிக்கட்ட போரின் போது இடையில் மாறியவர். இசைப் பிரியாவை கொலை செய்தமைக்கான வீடியோக்கள் உள்ளன.

சிலர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அரசாங்கமும் அது இசைப்பிரியா என்பதை ஏற்கவில்லை. இசைப்பிரியாவும் போரில் காணாமல் போயுள்ளார்

இசைப் பிரியா ஆயுதம் ஏந்தி போராடவில்லை என்பதுடன் அவர் இந்த நாட்டில் தனது கொள்கைக்கு அமைய ஊடகப் பணியை செய்த ஊடகவியலாளர் என்ற காரணத்தினால் வாழ்வுக்கு விடை கொடுத்தவர் என்றே கருதுகிறோம். – என குறிப்பிட்டுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert