யேர்மனியில் நடைபெற்ற மே நாள்
யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக தொழிலாளர் தினம்!யேர்மனி பேர்லின் மற்றும் சார்புறுக்கன்.
போராடினால் வெற்றியை அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்திய தொழிலாளர்கள் தினமான நேற்று ,சுதந்திரம் வேண்டிப் போராடும் தமிழீழ மக்களும் பல்லின மக்களுடன் இணைந்து தமது உரிமைகளுக்காக குரல் கொடுத்தனர். பல்வேறு நகரங்களில் நடைபெற்ற பேரணிகளில் தமிழ் மக்களும் இணைந்து தாயகத்தில் எமது உறவுகள் முகம் கொடுக்கும் கட்டமைப்புசார் இனவழிப்பை பதாதைகளின் ஊடாக வெளிப்படுத்தியதோடு
ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற இனவழிப்புக்கு நீதி கோரி யேர்மன் மொழியில் துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தனர்.
யேர்மன் தலைநகரில் தொழில்ச்சங்கத்தால் ஒருங்கிணைப்பட்ட பேரணியில் ஈழத்தமிழர்கள் சார்பாகவும் உரையாற்ற வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.