November 24, 2024

காங்கேசன்துறைக்கு நிவாரணம்?

இலங்கைத் தமிழர்களுக்குத் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு உணவு தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு உரிய வசதியை செய்து தருமாறு  இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இலங்கையில் தற்போது நிலவும் மோசமான பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு விரைவில் பொருட்களை அனுப்புவதற்கான வசதியை செய்து தருமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.​

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் பதில் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்க அனுமதி அளிக்கப்படுவதாகவும், பொருட்களை மத்திய அரசு மூலம் அனுப்பலாம் என்றும் கூறி உள்ளார்.

தமிழக அரசு விரும்பினால் இலங்கையில் பொருட்களை விநியோகம் செய்யும் பணிகளை ஒருங்கிணைக்க தலைமைச் செயலாளரை அனுப்பி வைக்கலாம் என்றும் ஜெய்சங்கர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப்பிரேரணை என்பன நாளை(03) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற மே தின பேரணியில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார். 

இதன்மூலம் குறித்த பிரேரணைகளுக்கு ஆதரவாக மற்றும் எதிராக வாக்களித்தவர்கள் விபரம் வெளிக்கொண்டுவரப்படுவதுடன், இரு நிலைப்பாடுகளில் உள்ளவர்கள் குறித்த விபரங்களை அறிய முடியும்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert