November 24, 2024

எரிபொருள் கப்பலிடமும் லஞ்சம்!

இலங்கைக்கு எரிபொருள் ஏற்றிவரும் கப்பல்களிடமிருந்து கொமிசன் அறவிடும் நடைமுறை காணப்பப்படுவதாக எச்சரித்துள்ள  தொழிற்சங்க பிரதிநிதியொருவர் இதன் காரணமாக நாட்டில் மோசமான எரிபொருள் நெருக்கடி ஏற்படலாம் என தெரிவித்துள்ளார்.

19ம் திகதிக்கு பின்னர் இலங்கைக்கு கப்பல் மூலம் எரிபொருள் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள ஆனந்த பாலித பொதுமக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்ற ஒரு சூழலில் அதிகாரிகள் கொமிசன் பெற முயல்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எரிபொருள் பௌசர்களின் சாரதிகளின் பணிபுறக்கணிப்பு காரணமாக எரிபொருள் தட்டு;ப்பாடு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாளைமுதல் தனியார் எரிபொருள் பௌசர்களின் உரிமையாளர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் சிறிய அளவு பௌசர்களே உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதற்கு அவசியமான 82 பௌசர்கள்  பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் இல்லை அமைச்சர் வெறும் அறிக்கைகளை வெளியிடுகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert