டென்மார்க்கில் நடைபெற்ற மேதின நிகழ்வு
“உழைக்கும் கரங்களே மனித வாழ்க்கையை இயக்கும் கரங்கள் ”
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்
டென்மார்க் தலைநகரில் (Fælledparken )பல்லின மக்களுடன் இணைந்து, டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடந்த தொழிலாளர் நாளில் தமிழீழ மக்களும் கலந்து கொண்டார்கள். இந் நாள் தொழிலாளர்களின் எழுச்சி நாளாகவும், சுதந்திரமாக வாழுகின்ற உரிமையை வென்றெடுப்பதற்கான நாளாகவும் விளங்குகின்றது.
உலகத்தொழிலாளர் என்ற பெரும் சமூகத்தினுள், தமிழீழத்தின் பரந்துபட்ட உழைக்கும் மக்களும் அடங்குகிறார்கள். தொழிலாளர் நாளில், எங்கள் தாயகத்தில் வாழும் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள், திட்டமிட்ட இன அழிப்பு நடந்து 13 வருடமாகியும் எந்தவித தீர்வுமின்றி மக்கள் வாழ்கிறார்கள். அதற்கான நீதியை பெற்றுத்தர வேண்டுமென சர்வதேச சமூகத்திடம் இன்றைய தொழிலாளர் நாளில் கேட்கின்றோம்.
செயற்பாட்டாளர்கள் டெனிஸ் மக்களுக்கு துண்டுப்பிரசுரமும் வழங்கி,அவர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
தமிழீழ மக்கள் அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து விடுதலையை வென்றெடுப்பதற்காக ஒன்று திரண்டு செயற்படவேண்டுமென இந்நாளில் அறைகூவல் விடுக்கின்றோம்.
டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம்
டென்மார்க்