பிரான்சில் மின்சாரப் பேருந்துகளில் தீ: சேவையிலிருந்து மீளப்பெறப்பட்டது பேருந்துகள்!
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அடுத்தடுத்து மின்சார பேருந்துகள் இரண்டு தீபிடித்ததைத் தொடர்ந்து போக்குவரத்துப் பாவையில் உள்ள 149 மின்சாரப் பேருந்துகளையும் பொதுமக்களின் பாதுகாப்பை கருதி போக்குவரத்து சேவையிலிருந்து மீளப் பெறுவதாக பிரான்ஸ் அரசாங்கத்திற்குச் சொந்தமான ஆர்ஏரிபி (RATP) அறிவித்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை தென்கிழக்கு பாரிசில் மின்சாரப் பேருந்தில் தீபிடித்து கரும் புகை வானை நோக்கி எழுந்தது. அத்துடன் பிளாஸ்டிக் எரியும் வாசனையை தீ ஏற்படுத்தியது என்று செய்தியாளர் ஒருவர் சம்பவ இடத்திலிருந்து கருத்து வெளியிட்டிருந்தார்.
பேருந்து ஓட்டுநர் உடனடியாக அனைத்து பயணிகளையும் வெளியேற்றினார். யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. நகர தீயணைப்பு சேவையைச் சேர்ந்த 30 தீயணைப்பு வீரர்களால் தீயை அணைத்ததாக கூறியது.
இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் 4 நாள் அன்று மத்திய பாரிஸில் உள்ள உயர்மட்ட புல்வர்ட் செயிண்ட் ஜெர்மைன் (Boulevard Saint-Germain) இல் முதல் மின்சாரப் பேருந்து தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. இதில் எவரும் காயமடையவில்லை.
புளூபஸ் என்பது பிரெஞ்சு பில்லியனர் வின்சென்ட் போல்லோரின் தயாரிப்பாகும். இவரின் கீழ் போக்குவரத்து, போக்குவரத்து தளபாடங்கள் மற்றும் ஊடகங்கள் இயங்குகின்றன. 80,000 ஊழியர்களுடன் பணியாற்றுகின்றனர். ஆண்டுக்கு சுமார் 24 பில்லியன் யூரோக்கள் ($25 பில்லியன்) வருவாய் ஈட்டுகிறது.
போலூரின் 12-மீட்டர் (39-அடி) மின்சார பேருந்துகள் பிரெஞ்சு தலைநகரின் வீதிகளில் 100 சதவிகிதம் மின்சார வாகனம் என்ற வாசகத்தைகள் பொறிக்கப்பட்டுள்ளது. அடுத்த தலைமுறை மின்கலன்கள், பாதுகாப்பு உத்தரவாதம், அடர்த்தி என பேருந்தின் மேற்பகுதி மற்றும் பின்புறமும் எழுதப்பட்டுள்ளன.