அத்தியாவசிய மருந்துகள்:ஆகாயத்தில்!
இலங்கையில் நாளுக்கொரு பொருள் என விலை அதிகரித்துவருகின்ற நிலையில் மருந்து பொருட்களின் விலைகளை 40 வீதத்தினால் அதிகரித்து அதிவிசேட வர்த்தமொனியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் ஜயசுமனாவினால் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2015 ஆண்டின் 5 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டத்தின் கீழ் மருந்து விலைகள் இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் 60 மருந்துகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பெரசிட்டமோல்,அட்டோவாஸ்டடின், எனலாபிரில் ,அஸ்பிரின் உள்ளிட்ட பல்வேறு மருந்து பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன