மகிந்த வெளியே:கோத்தா சம்மதம்-மைத்திரி!
இலங்கையில் புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளார் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.
புதிய பிரதமரின் கீழ் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய அமைச்சரவையை அமைப்பதற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளார், புதிய அமைச்சரவையை உருவாக்கவும் இணங்கியுள்ளார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று 11 சுயாதீன கட்சிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுடன் கலந்தாலோசிப்பது என தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளார்.