கோத்தா வீட்டே போ:ஈபிடிபியும் ஆதரவு!
ஜனாதிபதியும் அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என ஈபிடிபி கட்சி உறுப்பினர்கள் கோரியுள்ளனர் .ஈபிடிபி ஆளுகைக்குட்பட்ட வேலணை பிரதேச சபையிலேயே நேற்று இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜனாதிபதியும் அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்து எதிர்க்கட்சிகளான த.தே.கூட்டமைப்பு, ஐ.தே.கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன கறுப்பு பட்டி அணிந்து போராட்டம் நடாத்தியதோடு சபையில் தீர்மானமாகவும் முன்மொழிந்தனர்.
இதன்போது ஈபிடிபியின் ஒரு சாரார் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலைமையில் இரு ஈபிடிபி உறுப்பினர்கள் கறுப்புக்கொடியை அணிந்து பிரேரணைக்கு ஆதரவளித்தனர்.
இதன் அடிப்படையில் எதிர்க் கட்சிகள் முன்மொழிந்த பிரேரணை நிறைவேறியது.
பிரேரணையை கூட்டமைப்பின் உறுப்பினர் முன்மொழிய ஐ.தே.கட்சியின் உறுப்பினர் வழி மொழிந்திருந்தார்.
இதேநேரம் ஈபிடிபியின் இரு உறுப்பினர்களே கறுப்புக்கொடியை அணிந்து ஆதரவளித்துள்ளனர்.