கேபி குற்றப்புலனாய்வால் கைது!
ரம்புக்கன ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கேகாலை முன்னாள் எஸ்.எஸ்.பி ,கே.பி. கீர்த்திரத்ன கைதாகியுள்ளார்.
காவல்துறை அதிபரது உத்தரவின்றி துப்பாக்கி சூட்டை நடத்தியதாக அறிவிக்கப்பட்டு தொடர்புடைய அனைத்து இலங்கை காவல்துறையினரையும் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே மகிந்தவின் நெருங்கிய சகாவான குறித்த காவல்துறை அதிகாரி கைது போராட்டகாரர்களை ஏமாற்ற முன்னெடுக்கப்பட்டுள்ள நாடகமென விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கண்டி குண்டசாலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்