November 21, 2024

வடக்கில் இந்திய தூதரக உதவிகள் நேரடியாக!

இலங்கை தமிழ் மக்களது பட்டினியை போக்க நேரடியாக தமிழக உதவிகளை அனுப்பி வைக்க தமிழக முதலமைச்சர் மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ள நிலையில் யாழிலுள்ள இந்திய துணைதூதரகம் நேரடி உதவிகளை வழங்க ஆரம்பித்துள்ளது.

யாழிலுள்ள இந்திய துணைதூதர் இந்து ,முஸ்லீம் மற்றும் பௌத்த துறவிகள் சகிதம் நிவாரண பணிகளை இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்துள்ளார். 

இதனிடையே இணங்கினால் இலங்கையை இந்தியா தனது இன்னுமொரு மாநிலமாக அறிவிகக்க தயார்- அதற்கு பதிலாக இந்தியா இலங்கையில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு உட்பட ஏனைய பிரச்சினைகளிற்கு தீர்வை காணும் நீண்டகால விடயங்களிற்கும் உதவலாம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார் என குறிப்பிடும் ருவிட்டர் செய்தியொன்று பரபரப்பை தோற்றுவித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த ருவிட்டர் செய்தி போலியானது என தனது உத்தியோகப்பூர்வ ருவிட்டர் பக்கத்தில் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert