சுவீடனில் குரான் எரிப்பு: வன்முறையாக மாறியது போராட்டங்கள்!
சுவீடனில் கடந்த வியாழக்கிழமை முதல் குடியேற்ற எதிர்ப்பு மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு மையப்படுத்தி தீவிர வலதுசாரி குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை அடுத்து அங்குஅமையின்மை காணப்படுகிறது.
தற்போது சுவீடனில் பல நகரங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளன.
இப்போராட்டதில் 26 காவல்துறை அதிகாரிகள் மற்றும் 14 பொதுமக்கள் காயமடைந்தனர் என்று செய்தியாளர் சந்திப்பில் காவல்துறையினர் தெரிவித்தனர். அத்துடன் காவல்துறையினரின் 20 வாகனங்கள் எரிக்கப்பட்டும் தேசமாக்கப்பட்டும் உள்ளன.
குடியேற்ற எதிர்ப்பு மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு குழு ஹார்ட் லைனின் தலைவரான டேனிஷ்-ஸ்வீடிஷ் அரசியல்வாதி ராஸ்மஸ் பலுடன் புனித புத்தகத்தை எரித்தார்.
செப்டம்பர் தேர்தலுக்கு முன்னதாக ஆதரவு திரட்டும் நோக்கத்தில் அவர் ஸ்வீடனின் சுற்றுப்பயணத்தை அறிவித்தார். புனித ரமழான் மாதத்தில் குரானின் நகல்களை எரிக்கும் நோக்கத்துடன் அதிக முஸ்லிம் மக்கள் வசிக்கும் நகரங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்.
பலுதான் நகரில் கடந்த சனிக்கிழமை குரானை எரித்தார். சனி மற்று ஞாயிறு அமைதியின்மையின் போது ஒரு பள்ளிக்கு தீ வைக்கப்பட்டது.