சிறைபிடிக்கப்பட்ட பிரித்தானியக் கைதிகளை பரிமாற்றுமாறு கோரிக்கை!!
உக்ரைனின் மரியுபோலில் ரஷ்யாப் படைகளுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்து இரு பிரித்தானியப் போராளிகளை ரஷ்யப் படைகள் சிறைப்பிடித்துள்ள காட்சியை ரஷ்யத் தொலைக்காட்சியான ரொஸ்ஸியா 24இல் ஒளிப்பரப்பியுள்ளது.
பிரித்தானியப் போராளிகளான ஷான் மற்றும் ஐடன் அஸ்லின் ஆகிய இருவரும் தனித்தனியாகப் பேசினர். அதில் தங்களை கைதிகள் பரிமாற்றம் அதாவது ரஷ்ய சார்பு அரசியல்வாதியான விக்டர் மெட்வெட்சுக்கிற்கு தங்களை மாற்றிக் கொள்ளுமாறு இருவரும் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் கேட்டுக் கொண்டனர்.
அத்துடன் என்னை வீட்டிற்கு திருப்பி அனுப்புமாறு பிரித்தானிய அரசாங்கத்திடம் நான் முறையிட விரும்புகிறேன். என் மனைவியை மீண்டும் பார்க்க விரும்புகிறேன் சிறைப்பிடிக்கப்பட்ட கைதியில் ஒருவர் கூறியுள்ளார்.
சிறைப் பிடிக்கப்பட்ட குறித்த பிரித்தானியக் குடிமக்களான இருவரின் மனைவிமாரும் அவர்களை கைதிகள் பரிமாற்றம் ஊடக விடுவிக்குமாறு பிரித்தானியப் பிரதமரை வலியுறுத்தியுள்ளனர்.
அதேபோன்று மெட்வெட்சுக்கும் கைதிகளைப் பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
இவர் உக்ரைனின் எதிர்கட்சித் தளத்தின் தலைவர். ஃபார் லைஃப் கட்சி மற்றும் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நெருக்கமான உறவுகளை ஆதரிப்பவர். பல ஆண்டுகளாக புடினின் நண்பராக இருந்து வருகிறார்.