அன்னை பூபதிக்கு அஞ்சலிக்க மகளிற்கும் அனுமதியில்லை!
மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்ற தங்களை விடுதலைப்புலிகளிற்கு அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்து பொலிஸார் தடுத்துநிறுத்திவிட்டனர் என அன்னை பூபதியின் மகள் லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்துள்ளார்.
அன்னை பூபதியின் 34 நினைவுதினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தசென்றவேளையே தங்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு சீலாமுனை பகுதியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் மகளின் வீட்டில் அவரது குடும்பத்தினர் அன்னை பூபதியின் திருவுருவபடத்திற்கு மலர் தூவி இரண்டுநிமிட அங்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு பூபதியின் மகள் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
இன்று எனது தாயாரான அன்னை பூபதியம்மாவின் 34 வது ஆண்டு நினைவு நாள் அதனையிட்டு நாவலடியில் அமைந்துள்ள அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்துவதற்கு எனது குடும்பத்தினர் சென்றோம் அப்போது அங்கு இருந்த பொலிசார் எங்களை விசாரித்துவிட்டு நீதிமன்ற உத்தரவு என ஒரு பேப்பரை வாசித்துவிட்டு அவர் விடுலைப்புலிகளுக்காக உண்ணாவிரம் இருந்துள்ளர் எவரும் அஞ்சலி செலுத்த முடியாது என பொலிசார் தெரிவித்து அங்கு அஞ்சலி செலுத்த செல்லவிடாது தடுத்தனர்.
எமது தாயார் அப்போது மட்டு அம்பாறை அன்னையர் முன்னணி சார்பில் அமைதியான முறையில் இந்திய இராணுவத்துக்கு எதிராக உண்ணாவிரம் இருந்தார் எனவும் என பொலிசாருக்கு எடுத்துரைத்தேன் இருந்தபோதும் எங்கள் மூன்று பேரையும் அங்சலி செலுத்த விடாது பொலிசார் தடுத்ததையடுத்து அங்கிருந்து வெளியேறி வீட்டிற்கு வந்துள்ளோம்.