தமிழ் தேசத்திற்கான சுதந்திர அரசை அங்கீகரிக்கும் தருணம்: கனடாவில் வாகனப் பேரணி
கனடாவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன பேரணியில் „தமிழ் தேசத்தின் சுதந்திர அரசை அங்கீகரிக்க வேண்டிய நேரம் இது“ என்ற வேண்டுகோளை கனடா மற்றும் சர்வதேச சமூகத்திடம் முன்வைத்தனர். இன்று ஏப்ரல் 16, 2022 சனிக்கிழமை மதியம் 12 மணிக்குத் துவங்கிய கார் பேரணியை கனடியத் தமிழர்கள் ஒழுங்குபடுத்தி இருந்தனர்.
Brampton மற்றும் Scarborough வில் இருந்து நூற்றுக்கணக்கான கார்கள் Yonge Street & Sheppard Avenue வில் ஒன்றிணைந்து, Dundas Square வழியாக டொராண்டோ நகரத்திற்கு சென்றன.
பதாகைகளில் கீழ்வரும் சுலோகங்களும் அடங்கி இருந்தன: (1) தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவும்; (2) ஏழு தசாப்தங்களாக தமிழ் தேசத்தின் மேல் இடம்பெறும் ஆக்கிரமிப்பை அகற்றவும்; (3) ராஜபக்சே சகோதரர்கள் உட்பட அனைத்து இனப்படுகொலையாளர்களையும் ICC க்கு அனுப்புங்கள்.
மேலும் பதாகைகளில் பின்வரும் hashtags பயன்படுத்தப்பட்டன: #TamilNation #TamilGenocide #GotaWarCriminal #Gota2ICC
மாலை 5 மணியளவில் அமெரிக்க துணைத் தூதரக அலுவலகத்தை அடைந்த பேரணி, „தமிழ் தேசத்துக்கான சுதந்திர அரசு“ அங்கீகரிக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என உறுதி எடுத்து நிறைவு பெற்றது.