முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் :அணிதிரள அழைப்பு!
இன அழிப்பின் நினைவேந்தல் நாளை தமிழர் என்கின்ற நிமிர்வுடன் ஒன்றிணைந்து முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் முற்றத்தில் எதிர்வரும் மே18 இனில் நினைவேந்த அனைவரையும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அழைப்புவிடுத்துள்ளது.
இவ்வருடத்திற்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மிகப்பெரும் மக்கள் எழிச்சியுடன் நினைவேந்துவது தொடர்பக திட்டமிடல்க்கூட்டங்கள் எதிர் வரும் நாட்களில் அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினால் மேற்கொள்ளப்படுமெனவும் கட்டமைப்பினால் இன்று விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
நினைவேந்தல் முற்றுமுழுதாக மக்கள் பங்களிப்புடன் நடைபெறும். இதற்கான நிதி சேகரிப்புக்கள் புலம்பெயர் தேசங்களிலோ புலத்திலோ நடைபெறாது. தமிழ் மக்கள் நிதி சேகரிப்புக்கள் தொடர்பில் விளிப்புணர்வை பேணும் வண்ணம் அனைவரிடமும் அன்புரிமையுடன் கேட்டுக்கொள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு வேண்டுகோள்விடுத்துள்ளது.
தமிழினம் சிறீலங்கா அரசாலும் அதன் நேச நாசகார சக்திகளாலும் துடிக்கத் துடிக்க திட்டமிட்டு 2009 இல் கொன்றொழிக்கப்பட்ட நாளை, உலகு மௌனமாய்ப் பார்த்திருக்க எம்மினத்தை கருவறுத்த நாளை, பேதங்கள் அனைத்தையும் தவிர்த்து நினைவேந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.