மீண்டும் கடைகள் திறக்கின்றன?
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மட்டும் சர்ச்சைக்குரிய வகையில் கடைதிறக்கும் தமிழ்த் தேசிய கட்சி மீ;ண்டும் களத்திற்கு வந்துள்ளது.
நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்து, நாடாளுமன்ற ஆட்சி அதிகாரமுள்ள முறைமையை வலியுறுத்தி தமிழ் தரப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுக்கப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் முன்னோடி கலந்துரையாடல் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. கலந்துரையாடலுக்கு தமிழ் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முயற்சிக்கான நகர்வை தமிழ் தேசிய கட்சி முன்மொழிந்திருந்தது. அநேகமான தமிழ் கட்சிகள் இதனை ஏற்றுக் கூட்டு நகர்வாக திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.
முதல்கட்டமாக தமிழ் தேசிய பரப்பிலுள்ள அரசியல் கட்சிகள், மற்றும் சிவில் அமைப்புக்கள், மனித உரிமைகள் அமைப்புக்களிற்கு கலந்துரையாடல் அழைப்பு விடுக்கப்படடுள்ளது.
எதிர்வரும் 18ஆம் திகதி முதலாவது பேரணி வடக்கின் ஏதாவது ஒரு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யலாமென, ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.