வீதிக்கு வராதே:கோத்தா-டக்ளஸ் கிழுகிழுப்பு!
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, ஏப்ரல் 04 ஆம் திகதி காலை 6 மணி வரை எந்தவொரு பொதுவீதி, பூங்கா, பொழுதுபோக்கு அல்லது பிற மைதானங்கள், புகையிரத நிலையம் , கடற்கரை போன்றவற்றிற்கு எவரும் செல்வதைத் தடை செய்து இலங்கை ஜனாதிபதியினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை மனவைராக்கியத்துடன் எதிர்கொள்வதற்கான உற்சாகமூட்டல்களாகவே எதிர்தரப்பினரால் தூண்டி விடப்பட்டுள்ள போராட்டங்கள் அமைந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் சில வாரங்களுக்குள் நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் சகஜ நிலைக்கு திரும்பும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக இன்று கருத்து தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
„நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
நீண்ட பல வருடங்களாக எமது நாடு எதிர்கொண்ட பொருளாதார சவால்களின் திரட்சியே இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கின்றது.
கடந்த காலங்களில் பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு அவற்றில் வெற்றி பெற்ற எமது அரசாங்கம், தற்போதைய பொருளாதார சவால்களையும் முறியடிப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது
இவ்வாறான நிலையில், மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தும் எதிரணிகள், மக்கள் மத்தியில் தவறான பிரசாரங்களை மேற்கொள்வதுடன் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றன.