November 22, 2024

ராஜபக்சர்களது சகோதர சண்டை உக்கிரம்!

இலங்கை நாடாளுமன்றத்தில் சர்வதேச நாணயநிதியம் குறித்த விவாதத்தை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தவிர்க்க முயன்றார். ஆனால் இலங்கை பிரதமர் அதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.

ஏப்பிரல் மாதம் முதல்வாரத்தில் சர்வதேசநாணய நிதியம் குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில்; இடம்பெறும்வேளை மூன்று மாதங்களின் பின்னர் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிதியமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளை எதிர்கொள்ளவுள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தின் நிபந்தனைகள் குறித்து விவாதிக்கும் நோக்கத்தில் நிதியமைச்சர் இல்லை. சர்வகட்சி கூட்டத்தில் கூட சர்வதேச நாணயநிதியத்தின் ஆவணத்தின் நகல்வடிவம் மாத்திரமே காணப்பட்டது .இது மாற்றங்களிற்கு உட்படக்கூடியது என  தெரியவருகின்றது.

எனினும் சர்வதேச நாணயநிதியம் இலங்கை  குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளதை தொடர்ந்து  முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அது குறித்த விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நிதியமைச்சர் ரணில்விக்கிரமசிங்கவின்  வேண்டுகோளிற்கு பதிலளிக்கவில்லை, எனினும் இந்த விவகாரம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்ற விவாதத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

இது பசில் ராஜபக்சவை நாடாளுமன்ற விவாதங்களில் கலந்துகொண்டு கேள்விக்கு பதிலளிக்க செய்வதற்கான ஒரு வழிமுறையாக காணப்படுகின்றது என  சிரேஸ்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து நாடாளுமன்றத்தில்  எதிர்கட்சிகளின் கேள்விகளிற்கு பசில்ராஜபக்ச பதிலளிக்க மறுப்பது அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களை கூட அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதுஎன சிரேஸ்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டவேளை ரணில்விக்கிரமசிங்க சர்வதேச நாணயநிதியத்தின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு விடுத்தவேண்டுகோளை பசில்ராஜபக்ச ஏற்க மறுத்ததிற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பின்னர் கடுமையாக கண்டித்தார் எனவும் சிரேஸ்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert