பிரித்தானியாவில் 4வது ஸ்பிரிங் பூஸ்டர் தடுப்பூசி போடவேண்டும்!!
ஸ்பிரிங் பூஸ்டர் அதவாது 4-வது டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று இங்கிலாந்தின் தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டுக் குழு அண்மையில் அறிவுறுத்தியது.
அதன்படி 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு 4-வது டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்துவதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக இங்கிலாந்து சுகாதார அமைச்சகம் நேற்று அறிவித்தது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபர்களுக்கும் 4-வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து சுகாதார செயலாளர் சாஜித் ஜாவித் இதுபற்றி கூறுகையில்,
ஸ்பிரிங் பூஸ்டர்’ தடுப்பூசி முதியோர் மற்றும் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்படுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். மேலும், கொரோனாவால் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் என கூறினார்.