16,000 போராளிகளை உக்ரைனுக்குள் களமிறக்குகிறது ரஷ்யா
ரஷ்யா – உக்ரைனை் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்யா தனது உக்ரைமான தாக்குதலை நடத்திவருகிறது. ஆனாலும் உக்ரைனும் ரஷ்யாவுக்கு எதிராக முறியடிப்புத் தாக்குதல்ளை நடத்தி வருவதால் இரு தரப்பினருக்கும் அதிக உயிரிழப்புகள் மற்றும் தளபாட இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் ரஷ்யா அதிபர் புடின் தன்னார்வப் போராளிகளை உக்ரைனுக்குள் கொண்டுவர உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 16,000 தன்னார்வ போராளிகளை மத்திய கிழக்கிலிருந்து உக்ரைனுக்குள் போராடுவதற்கான விண்ணப்பங்கள் கிடைத்தாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு கூறினார்.
இவர்கள் ஜ.எஸ் அமைப்பு என்று அழைக்கப்படும் இஸ்லாமிய அரசுக்கு எதிராக போராடுவதற்கு ரஷ்யாவுக்கு உதவியவர்கள் என்று செர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் பணத்திற்காக போராடவரவில்லை என்றும் டான்பாஸில் வசிக்கும் மக்களுக்கு உதவுவதற்காக போராட வருவகிறார்கள் என்று ரஷ்யப் பாதுகாப்பு பேரவைக் கூட்டத்தில் புடின் கூறினார்.
இவர்கள் சிரியாவில் கட்டிடச் சண்டையில் அனுபவம் உள்ளவர்கள் என்று சுட்டிக்காட்டத்தக்கது.
இதேநேரம் உக்ரைனுக்காக போரிட வெளிநாட்டு கூலிப்படையினரை மேற்குலகம் ஏற்பாடு செய்து வருகிறது. இநேரம் 16,000 வெளிநாட்டுப் தன்னார்வலர்கள் போராட முன்வந்துள்ளனர் என்று உக்ரைனிய அதிபா வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.