மேற்கு நாடுகளுக்கு பதிலடி: 200 பொருட்களை ஏற்றுமதி செய்யத் தடை!
மேற்கத்திய நாடுகளுக்கு பதிலடி தரும் வகையில் ரஷ்யாவிலிருந்து 200 வகையான பொருட்களின் ஏற்றுமதியை இந்த ஆண்டுவரை தடை செய்து ரஷிய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்த தடையில் எந்திரங்கள், மின்னணு பொருட்கள், கார்கள், உதரிபாகங்கள், உணவுப் பொருட்கள், வேளாண் உபகரணங்கள், மருந்துப்பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், ரயில் எஞ்சின்கள், ரயில் பெட்டிகள், கண்டெய்னர்கள், டர்பைன்கள், உலோகங்கள், விலை உயர்ந்த கற்கள், கட்டிங் எந்திரங்கள், வீடியோ டிஸ்ப்ளே, பிரஜெக்டர், கன்சோல், ஸ்விட்போர்டு என 200 இந்த ஆண்டு இறுதிவரை மேற்கு நாடுகளுக்கும்,பிறநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய ரஷ்ய அரசு தடை விதித்துள்ளது.
ஆனால், யூரோசியா பொருளாதாரக் கூட்டமைப்பில் உள்ள அப்காஜியா, தெற்கு ஆசெட்டியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தடையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு வகையான மரங்கள், மரப்பொருட்கள், மரத்தில் செய்யப்பட்ட பெட்டிகள் என எந்த பொருட்களையும் ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.