März 28, 2025

இரவோடிரவாக எகிறிய எரிபொருள்!

பொதுமக்களது  சீற்றத்தின் மத்தியில்டீசல் மற்றும் பெற்றோல் ஆகியவற்றின் விலையை இன்று (10) நள்ளிரவு முதல் அதிகரிக்க லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, அனைத்து வகையான டீசல் விலையையும் ஒரு லீற்றருக்கு 75 ரூபாவால் அதிகரிப்பதற்கு அந்த நிறுவனம் அறிவித்துள்ளது

மேலும், ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்படுகின்றது எனவும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், விலைவாசிக்கு ஏற்றவாறு எரிபொருள் விலை அதிகரிக்க வேண்டும் என, அரசாங்கத்துக்கு முன்மொழிந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க, நேற்று (10) தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

தற்போது, ஒரு லீற்றர் டீசலுக்கு 128 ரூபாய் மற்றும் ஒரு லீற்றர் பெற்றொலுக்கு 80 ரூபாய் நட்டமும் கூட்டுத்தாபனத்துக்கு ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் விலையை திருத்தும் அதிகாரம் பெற்றொலியக் கூட்டுத்தாபனத்துக்கு மட்டும் இருந்தால், அது தவிர்க்க முடியாமல் விலையை உயர்த்தும் என்று குறிப்பிட்டார்.

தற்போதைய விலையில் இந்த செலவை அரசாங்கம் ஏற்கும்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert