யேர்மனியில் விமான நிலையத்திற்குச் செல்லும் சாலைகளை மறித்துப் போராட்டம்!!
யேர்மனியில் மூன்று விமான நிலையங்களுக்கச் செல்லும் சாலைகளை வழிமறித்து போராட்டங்களை நடத்தியுள்ளனர் காலநிலை ஆர்வலர்கள்.
காவல்துறையினர் வருவதற்கு முன்பே காலநிலை ஆர்வலர்கள் சாலைகளில் அமர்ந்து சாலைகளில் வானங்கள் செல்லவிடாது வழிமறித்தனர். குறிப்பாக பிரான்ங்போட், மூனிச், பேர்லின் நகரங்களுக்குச் செல்லும் சாலைகளையே வழிமறிக்கப்பட்டன.
உணவு வீணாவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருட்களை அதிக அளவில் தூக்கி எறிவது பசி மற்றும் காலநிலை மாற்றத்திற்கு பங்களிக்கிறது என்று அது வாதிடுகிறது.
சாலைகள் மற்றும் துறைமுகங்களைத் தடுப்பது தொடர்பான கடந்தகால போராட்டங்கள் அரசியல் விமர்சனங்களை ஈர்த்துள்ளன.
இந்த முற்றுகைகள் கடந்த ஆண்டு காலநிலை நடவடிக்கை குழு இன்சுலேட் பிரிட்டனின் எதிர்ப்பை நினைவூட்டுகின்றன.