சுமந்திரனோ வீதியில்:அம்பிகா படியேறுகிறார்!
ஆட்சியை மாற்றியமைக்க சதிகள் பின்னப்படுவதாக கோத்தபாய குரல் எழுப்பிவரும் நிலையில் எம்.ஏ.சுமந்திரன் கையெழுத்து வேட்டையில் குதித்திருக்க அவரது வலது கையான அம்பிகா நீதிமன்ற படியேறியுள்ளார்.
பயங்கரவாத தடை திருத்தச் சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானது, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்
இதனிடையே மற்றொரு சுமந்திரனின் பினாமி அமைப்பான ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் அமைப்பு வாழ்வதற்கான உரிமையும் அடிப்படை உரிமைகளும் தற்போது அச்சுறுத்தலிற்கு உள்ளாகியுள்ளன என தெரிவித்துள்ளது.
மக்கள் உரிமைகளிற்காக குரல்கொடுக்கவேண்டிய தருணம் உருவாகியுள்ளது என அமைப்பின் ஏற்பாட்டாளர் சட்டத்தரணி லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார்.
மகரசிறையில் பல கைதிகள் கொல்லப்பட்டமை குறித்து இன்னமும் உரிய விசாரணைகள் இடம்பெறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் மனித உரிமைக்கும் உயிர்வாழ்வதற்கான உரிமைக்கும் அச்சுறுத்தலானவை என அவர் தெரிவித்துள்ளார்.
இது ஆபத்தான முன்னுதாரணம் பொதுமக்கள் இது குறித்து உணர்வதற்கான நிலைமையை ஏற்படுத்தவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களின் தலையீடுகள் மூலம் பொதுமக்கள் குரலெழுப்பி மனித உரிமை மீறல்களிற்கு எதிராக வீதிக்கு இறங்குவதன் மூலம் மாத்திரமே மனித உரிமை மீறல்களை முடிவிற்கு கொண்டுவரமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.