November 22, 2024

வடக்கிற்கு போதை பொருள் பின்னணியில் தமிழக காவல்துறை?

இலங்கையின் வடபுலத்திற்கு கொக்கைன் போதை பொருள் கடத்திய முக்கிய குற்றவாளியான தமிழ்நாடு  காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் பாலமுருகன் உட்பட 8 பேரை கைது செய்த தமிழகம்  பொலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு  போதைப் பொருட்களான கஞ்சா, ஹெராயின், பீடி இலை, கொக்கைன் மற்றும் கடல் அட்டை, கடல் குதிரை, அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது.

கடல் வழியாக நடைபெறும் கடத்தல் சம்பவங்களை தடுக்க இந்திய இலங்கை  சர்வதேச கடல் எல்லையில்  கடற்படையினர் தீவிர கண்காணிப்ப பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கொக்கைன் போதைப் பொருள் கடத்த இருப்பதாக ராமநாதபுரம் தீவிர குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து வியாழக்கிழமை காலை ராமேஸ்வரம் பகுதியில் தொடர்ந்து சோதனை செய்து வந்தனர். அதன்போது  ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே தனியார் நட்சத்திர விடுதிக்கு பின்புறம் ஒரு கும்பல் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்ததை கண்ட தீவிர குற்றப்பிரிவு ஆய்வாளர் சந்தேக நபர்களிடம்  விசாரணை செய்ய  சென்ற போது   தப்பி ஓட முயற்சித்துள்ளனர்.

தீவிர குற்றப்பிரிவு போலீசார் அவர்களை  மடக்கி பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம்  இருந்து  பவுடர் பாக்கெட் ஒன்று கைபற்றப்பட்டது. அந்த பவுடரை  சோதனை செய்ய ராமநாதபுரத்தில் உள்ள போதை தடுப்பு பிரிவினருக்கு அனுப்பி வைக்கபட்டது.

அந்த சோதனையில் பவுடராக மீட்கப்பட்டது  கொக்கைன் போதை பொருள் என  உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து தீவிர குற்றப்பிரிவு போலீசாரிடம் பிடிபட்;ட  சிவகங்கை மாவட்டம் சூரியகுமார் பாம்பனை சேர்ந்த மனோஜ், சாதிக் அலி, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த முகமது இஸ்மாயில், அங்குரத ராம் ஆகிய 5 பேர் மீது ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசரணை நடத்தப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் ஒன்று வெளியானது இலங்கைக்கு கொக்கைன் போதை பொருள் கடத்த பிரதானமாக  செயல்பட்டு வந்தது ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என தெரிய வந்தது.

இவர் 2013 ஆம் ஆண்டு காவல் துறையில் பணிக்கு சேர்ந்து ராமேஸ்வரம் கடலோர காவல் குழும சோதனை சாவடியில் பணியாற்றி தற்போது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அடுத்துள்ள காடல்குடி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் பொலீசார்  வெள்ளிகிழமை காலை கமுதி அருகே  சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து காவலர் பாலமுருகன் உட்பட 8 பேரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert