November 22, 2024

செந்தமிழ் மொழி வீசுகிறது நாடாளுமன்ற காற்றிலே!

இலங்கை பாராளுமன்றம் அரசியல்வாதிகளது வாயிலிருந்து வருகை தரும் செந்தமிழ் சொற்களால் மதிகலங்கியுள்ளது.

குறிப்பாக ஆளும் தரப்பால்  கெட்ட வார்த்தை பிரயோகம் இயலாமை காரணமாக தரளமாகியுள்ளது. 

இப்போது எழுந்துள்ள நெருக்கடிகளுக்கு எதிராக   ஆளும் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக  எதிர்க்கட்சியினர் பேசும் போது அவர்களை நசுக்குவதற்கு பாராளுமன்றத்தில் கெட்ட வார்த்தைகளை அள்ளி வீசுகின்றனர்.

புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மாயாதுன்ன சிந்தக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் பாராளுமன்றத்தில் தனது உரையை ஆற்றிய போது, அவர் மீது தொடர்ச்சியாக  கெட்ட வார்த்தைப் பிரயோகம்; இடம்பெற்றுள்ளது.

அந்த வார்த்தைகளை பயன்படுத்துவதை நிறுத்துங்கள் என்று சில எதிர்கட்சி எம்.பி.கள் கூறியபோதிலும்  மாயாதுன்ன சிந்திக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருக்கு தொடர்ந்து இந்த வார்த்தைகளை பிரயோகித்து அவரை அடக்க முயன்றனர்.

அண்மைய மாதங்களில், குறிப்பாக பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களால் இவ்வாறான  கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கு எதிரான முறைப்பாடுகள் அரசாங்கத்தின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சி எம்.பி.கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் நாடாளுமன்ற சபாநாயகரிடமும் எழுப்பப்பட்டது.

அரசாங்கத்தின் தோல்விகளால் விரக்தியடைந்து சபையில் இதுபோன்ற கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளதாகவும்,  கூறப்படுகின்றது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert