கனடா ஒட்டாவாவில் 10 நாட்களுக்கு கோன் அடிக்கக்கூடாது – நீதிமன்றம் தடை
கனடா தலைநகர் ஒட்டாவாவில் தொடர்ச்சியாக நடந்து வரும் பாரவூர்திகளின் வாகனப் பேரணியில் எழுப்பப்படும் கோன் அடிப்பதை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10 நாட்களுக்கு வாகனங்களின் ஹாரன்களை ஒலிக்கத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுமார் 400 தொடக்கம் 500 வரையான பாரவூர்தி வாகனங்கள் ஒன்றாக கோன் அடிப்பதால் எழுப்பப்படும் சத்தமான அலறல் காரணமாக உள்ளூர் மக்களிடையே கோபத்தை தூண்டியது. அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கடந்த 10 நாட்களாகத் தொடரும் அமெரிக்க எல்லையை கடக்க டிரக்கர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற விதிகளுக்கு எதிராக போராட்டம் பாரவூர்தி உரியைாளர்களால் நகரங்கள் முழுவதும் வாகனப் பேரணி நடாத்தப்பட்டு வருகிறது. போராட்டக்காரர்களின் வாகனப் பேரணி காரணமாக ஒட்டாவா முடக்கியிருந்தது.
ஒட்டாவாக மேயல் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தினார்.
இந்நிலையில் கோன் அடிப்பது நான் அறிந்த வரையில் சிறந்த சிந்தனையின் வெளிப்பாடல்ல என நீதுிபதி மெக்லீன் தீர்ப்பில் கூறியுள்ளார். அத்துடன் போராட்டத்தில் ஈடுபடுவோர் நகரத்தில் கோன் அடிக்கவும் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.